பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் ஸ்வப்னில் தாவ்ரே என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி ரோஷினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இதில் ரோஷினி ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்தவர். இந்நிலையில் ஸ்வப்னில் தாவ்ரேவை 2-வதாக ரோஷ்னி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஸ்வப்னில் தாவ்ரேக்கு மனைவி ரோஷினியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இதே போல சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த ஸ்வப்னில் தாவ்ரே ரோஷ்னியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதற்கிடையே சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த ரோஷ்னியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஸ்வப்னில் தாவ்ரே கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.