டெல்லியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பகுதி செங்கோட்டை ஆகும். இந்த கோட்டை சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட நிலையில் முகலாயப் பேரரசர்களின் முக்கிய இடமாக கருதப்பட்டது. இந்நிலையில் சுல்தானா பேகம் என்ற பெண் டெல்லி செங்கோட்டை தனக்கு தான் சொந்தம் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகள் விசாரணையை தொடங்கினர்.

அப்போது அந்த பெண்ணிடம் செங்கோட்டை மட்டும் ஏன்? ஆக்ரா, பதேபூர் சிக்ரி போன்ற இடங்களிலும் தான் கோட்டைகள் இருக்கின்றன என்று கேட்டதற்கு அந்தப் பெண் பதில் அளிக்க முடியாமல் தடுமாறி நின்றார். இதைத் தொடர்ந்து அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதே போன்று கடந்த வருடமும் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்று டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.