
கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் மேகனா ஷெட்டி.சிவமக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் சுதீப் ஷெட்டி . இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இருவரும் இஞ்சினியர் பட்டப்படிப்பு முடித்து பெங்களூருவில் தனியார் ஐடி நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சுதீப் அடிக்கடி மேகனாவிடம் வரதட்சணை கேட்டு தகராரில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதேபோன்று சம்பவ நாளன்று இரவு இருவரும் சண்டை போட்டுள்ளனர். இதனை அடுத்து மேகனா அடுத்த நாள் காலை ரூமில் கயிற்றில் பிணமாக தொங்கினார். இச்செய்தி குறித்து அக்கம் பக்கத்தினர் மேகனாவின் குடும்பத்தினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே விரைந்து வந்த காவல்துறையினர் மேகனாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து மேகனாவின் பெற்றோர் சுதீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுதிப்பிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது சுதீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மேகனாவிடம் அதிகப்படியான வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் சம்பவத்தன்று ஏற்பட்ட சண்டையில் மேகனாவை அடித்து தூக்கில் தொங்க விட்டதாக சுதீப் ஒப்புக்கொண்டுள்ளார். வரதட்சணை கொடுமையால் இளம்பெண் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.