கொடைக்கானலில் உள்ள மனோரத்தினம் அணைக்கு தண்ணீர் அருந்த மான் ஒன்று வந்தது. அந்த அணையின் கரைப்பகுதிக்கு வந்த மானை, அங்கு சுற்று திறந்த தெரு நாய்கள் பார்த்து விட்டது. இதையடுத்து மகிழ்ச்சியில் இருந்த அந்த நாய்கள் மானை வேட்டையாட வேண்டும் என்று நினைத்தது. இதனால் தூரத்திலிருந்து மானை துரத்தியபடி நாய்கள் வந்தன. இதனைப் பார்த்த கரையோரத்தில் நின்றிருந்த மான் கதி கலங்கி விட்டது.

இதையடுத்து நாய்களிடமிருந்து தப்பிக்க மான் தண்ணீருக்குள் குதித்தது. அதனை பின் தொடர்ந்த நாய்களும் தண்ணீருக்குள் குதித்தனர். தண்ணீருக்குள் யுத்தம் தொடங்கியது. இதையடுத்து நாய்களிடம் இருந்து தப்பித்து மான் வனப்பகுதிகளுக்குள் ஓடியது. சுமார் 40 நிமிடங்கள் நாய்களுடன் மான் போராடியது.

ஒரு கட்டத்தில் தப்பித்தோம் பிள்ளைத்தோம் என்று அந்த மான் தண்ணீரிலிருந்து கரைக்கு ஏறி அடர்ந்த காட்டிற்குள் தப்பி ஓடியது. அதன் பிறகு அந்த நாய்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்று விட்டன. துரத்தி வந்த தெரு நாய்களிடமிருந்து மான் தப்பித்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்ட இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.