சென்னையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பொள்ளாச்சி வன்முறையில் ஈடுபட்ட அந்த சார் யார் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் இந்த பிரச்சனையை ஊதி ஊதி பெரிதாகுகின்றனர். இதோடு எடப்பாடி பழனிச்சாமி நிறுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் அவரை நோக்கி மக்கள் போராடும் சூழல் ஏற்படும். நேற்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பை டவுன்லோட் செய்து அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் அனுப்பி இருக்கிறோம்.

எந்த போராட்டமாக இருந்தாலும், அதை நோக்கி கவனத்தையும், அரசின் கவனத்தையும் ஈர்ப்பது தான் நோக்கமாக இருக்க வேண்டும். இவர்கள் போராட்டம் செய்வதில் குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதோடு கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் போராட்டம் என்று வீதிக்கு வரும்போது தங்களுடைய சுய விளம்பரத்திற்காக பாதிக்கப்படும் மக்களை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதனால் தினம்தோறும் பலரும்  பாதிக்கப்படுகின்றனர். அதேபோன்று போராட்டத்தில் ஈடுபடுவோரை அப்புறப்படுத்தி கைது செய்து விடுவித்து விடுகிறார்கள், இதில் எந்தவித அடக்குமுறையும் இல்லை. இந்தப் போராட்டத்தால் யாராவது கைது செய்யப்பட்டு இருக்கிறார்களா? எப்படி அடக்குமுறை என்று சொல்ல முடியும். யாரையும் கெடுக்கின்ற அரசு அல்ல மன்னிப்போம் மறப்போம் என்ற அரசு  தான் இந்த அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.