
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்றைக்கு வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு. எல்லாம் உயர்ந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்ற நிலைமை… சிலிண்டருக்கு மாதம் 100 ரூபாய் தருகிறேன் என்று சொன்னார். அந்த 100 ரூபாயும் தரவில்லை… ஒரு பச்சை புழுகு… 100% அளவிற்கு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம் என்று சொன்னால், யாரு காதில் இவர்கள் பூ சுற்றுகிறார்.
கண்டிப்பாக தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை நம்ப மாட்டார்கள்… எனவே இது எல்லாம் எங்களுடைய கழகத்தினுடைய செயல்வீரர்கள், வீராங்கனைகள் அத்தனை பேருமே பொதுமக்கள் எடுத்துச் சொல்லுவோம். எங்களுடைய ஆட்சி காலத்தில் சாதனைகள், அண்ணன் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் உள்ள சாதனை எல்லாம் கண்டிப்பாக மக்கள் மத்தியில் சொல்வோம்.
தாலிக்கு தங்கம் நிறுத்தியாச்சு… ஸ்கூட்டி மானியம் நிறுத்தியாச்சு… பேங்கில் கல்வி கடன் வாங்கினால் ரத்து பண்ணுவோம் என சொன்னார்கள். இதை எல்லாம் செஞ்சாங்களா ? எல்லாம் ஜப்தி பண்ணிட்டு இருகாங்க. இதெல்லாம் எடுத்து சொல்லுவோம். எங்களுடைய ஆட்சி காலத்துல எவ்வளவு திட்டங்கள்… எல்லாம் நாங்கள் செய்தோம் இதையும் சொல்வோம்.
மக்களை பொறுத்தவரை இன்றைக்கு எப்படா எலக்சன் வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வரட்டும், நாங்கள் யாரென்று காட்டுகின்றோம் என்ற அடிப்படையில் இன்றைக்கு மக்கள் ஆளும் விடியாத திமுக அரசின் மேலே கடும் கோபம், கடுமையான எதிர்ப்பு அலை இருக்கின்ற நிலையிலே… எங்களுடைய திட்டங்கள், எங்களுடைய இயக்கம் மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்களை நினைத்து பார்த்து… எங்களுக்கு ஆதரவான அலை தமிழ்நாட்டில் வீசிக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.