
வாட்ஸ்அப்பின் ‘View Once’ அம்சம், ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அனுப்ப பயன்படுகிறது. இது தனியுரிமை சார்ந்த ஒரு அம்சமாக கருதப்படுகிறது. ஆனால், சமீபத்திய ஆராய்ச்சியின்படி, இந்த அம்சத்தில் ஒரு பெரிய பாதுகாப்பு குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை மட்டுமே பார்க்கக்கூடிய ஆப்ஷனில் அனுப்பினாலும் ஒருவர் டெஸ்க்டாப்பில் புகைப்படம்/வீடியோவை பார்ப்பது மட்டுமின்றி அதை அவர்களின் சாதனத்திலும் சேமிக்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனர்கள் தங்கள் தனியுரிமையை இழக்கும் அபாயம் உள்ளது.
இந்த பாதுகாப்பு குறைபாட்டை சரிசெய்ய வாட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த பிரச்சனை பயனர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. தனியுரிமை சார்ந்த அம்சங்களை பயன்படுத்தும் போது, அவற்றின் பாதுகாப்பு குறித்து நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.