செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உட்பட 36 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்ட பேரவையிலே கவன ஈர்ப்பு தீர்மானம் அண்ணா திமுக சார்பாக கொடுக்கப்பட்டது. அதே போல பல்வேறு கட்சிகளும் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திலே பேசினார்கள். இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திலே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக…  நான் 36 சிறைவாசிகள்,  சுமார் 20 முதல் 25 ஆண்டு காலம் இஸ்லாமியர்கள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள்.  அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல இஸ்லாமிய அமைப்புகள் எங்கள் இடத்திலே கோரிக்கை வைத்தார்கள்.

சில அரசியல் கட்சி சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்தார்கள். அவர்களின் கோரிக்கை அடிப்படையிலே விதி எண் 55இன் அடிப்படையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டது. கவன ஈர்ப்பு தீர்மானம் எடுக்கப்பட்டு,  அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திலே நான் சில கருத்துக்களை அண்ணா திமுக சார்பாக பேசினேன். அதில் பிப்ரவரி 14,  1998 அன்று கோயமுத்தூரில் நடைபெற்ற  குண்டுவெடிப்பில் பலபேர் இறந்து உள்ளனர். பல  பேர் காயம் அடைந்து உள்ளனர்.

இக்குண்டு வெடிப்பு தொடர்பாக 16 பேர் ஆயுள் தண்டனை பெற்று உள்ளனர். மேலும் 20 பேர் பல்வேறு சமூக குற்ற வழக்குகள் தண்டனை பெற்று சிறையில் வாடிக்கொண்டிருக்கார்கள். ஆக மொத்தம் 36 இஸ்லாமியர்கள் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலே இருந்து வருகின்றனர். திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் 15.11.2021 அன்று போட பட்ட அரசு ஆணையால் .. அரசு ஆணை எண் 488 நாள்  15.11.2021 இதனால் முன் விடுதலையாவது தடைபட்டுள்ளது என்று  இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் கடிதத்தில் எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் இந்த அரசு ஆணையை வெளியிடவில்லை. இவர்கள் ஒரு சில உடல்நில குறைவு காரணமாக சிறையிலே உயிர் இழந்து விட்டார்கள். தற்போது ஆயுள் தண்டனையில் சிறையில் இருந்து வரும் 36 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல அரசியல் காட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றார்கள். எங்கள் இடத்திலும் கோரிக்கை வைத்தார்கள்.

எனவே சுமார் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி கொண்டிருக்கும் 36 இஸ்லாமிய சிறைவாசிகள் சிறையில் இருந்து கொண்டிருக்கார்கள். இவர்கள் வயது மூப்பு,  உடல்நல குறைவு மற்றும் குடும்பத்தின் வேண்டுகோள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் அரசு பரிசீலனை செய்து விடுதலை செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்,  ,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சார்பாக….

இதற்கு முதலமைச்சர் அவர்கள் பதில் அளிக்கின்ற போது, இதற்கு உண்டான பதில் அளித்து இருந்தால் பிரச்சனை அல்ல. ஆனால் பேசிக்கொண்டே இருக்கின்ற பொழுது.. திடீர் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இஸ்லாமியர் மீது என்ன அக்கறை வந்தது ?  அப்படினு கேள்வி எழுப்பினார். அதோடு மட்டும் நிற்காமல் இஸ்லாமிய அமைப்பு,  இஸ்லாமியர்களுக்கு அண்ணா திமுக அரசாங்கம் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்ற குற்ற சாட்டையும் வைத்தார். அதற்கு தான் பதில் அளிக்க முற்பட்டேன். ஆனால் சட்ட பேரவை தலைவர் அவர்கள்,  நான் பதில் சொல்லுவதற்கு அனுமதி அளிக்கவில்லை. அதை தொடர்ந்து நாங்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என தெரிவித்தார்.