
அமெரிக்காவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் டைனோசர்கள் காலத்தில் இருந்த உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் இருக்கும் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் மைக்கேல் என்பவர் 2012 ஆண்டு வால் மார்க் என்ற அங்காடிக்கு பால் வாங்க சென்ற போது அங்கு மிகப்பெரிய பூச்சி ஒன்றை கண்டுள்ளார். இதை அடுத்து பாலுடன் சேர்த்து அந்த பூச்சியையும் வீட்டுக்கு கொண்டு வந்த அவர் அதை பத்திரப்படுத்தி பிறகு ஆராய வேண்டும் என்று நினைத்த நிலையில் அதை அப்படியே மறந்து விட்டார்.
காலங்கள் வேகமாக சென்ற நிலையில் 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் வகுப்புகளில் கலந்து கொண்டு வந்தனர். இந்நிலையில் மைக்கேல் 2012 ஆம் ஆண்டு அவருக்கு கிடைத்த பூச்சியை கொண்டு தன்னுடைய மாணவர்களுக்கு பூச்சியின் பரிமாணம் மற்றும் பல்லுயிர் குறித்த பாடம் எடுக்கையில் அவருக்கும் அவரது மாணவர்களுக்கும் பேர் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அவர் கையில் வைத்திருந்த பூச்சியானது 50 வருடங்களுக்கு முன்பு அழிந்ததாக கருதப்பட்ட ராட்சத லேஸ்விங்ஸ்கள் ஆகும். இந்த வகை பூச்சியானது வட அமெரிக்காவில் அதிகம் காணப்பட்டு வந்த நிலையில் சில நாட்களில் ஒலி மாசு காரணமாய் இவை அழிந்து விட்டதாகவும் கருதப்பட்டது. இந்த பூச்சிகள் டைனோசர்களின் சகாப்தங்களில் வாழ்ந்தவை என்றும் கூறப்படுகிறது.