
செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்னைக்கு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி இருக்காங்களா ? திமுக. எல்லா பக்கமும் மணல் கொள்ளை மிக அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. கனிமவள கொள்ளை. நான் கூட ஆலங்குளத்தில் போய் மிகப்பெரிய போராட்டம் நடத்தினேன். அங்க மட்டும் கிடையாது, கரூர் – திருச்சி – வேலூர் மாவட்டம் – விழுப்புரம் மாவட்டம் எல்லா பகுதிகளுமே மணல் கொள்ளை.
இதையெல்லாம் தடுக்க வேண்டிய அரசு, அவங்களே அதுல பினாமியாக… குவாரிகளை எடுத்து நடத்திக்கிட்டு இருக்காங்க அப்படின்னா… எந்த அளவு கொடுமையான விஷயம். அரசு நிர்ணயித்த அளவைவிட …. ஒரு நாளைக்கு ஆயிரம் லாரிகள் கேரளாவுக்கு அனுப்பபட்டுக் கொண்டிருக்கிறது.
எதிர்கால தமிழகம் இன்னைக்கு கேள்விக்குறியா? இருக்கு. இது உண்மை. இருக்கின்ற அத்தனை வளங்களையும் இன்னைக்கு சுரண்டிக்கொண்டு இருந்தால், எதிர்கால சந்ததிகளுக்கு தமிழ்நாட்டில் என்ன கிடைக்கப் போகிறது? இப்பயே தண்ணி இல்ல வறண்ட பூமி ஆயிடுச்சு. நமக்கு தண்ணி கொடுக்க வேண்டிய கர்நாடகம், இன்னைக்கு நம்மளை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
முதலமைச்சர் போறாரு , மீட்டிங் போடுறாரு, தேர்தலுக்கு மட்டும் தான் அவங்க வந்து இன்னைக்கு கூட்டணிகளை யூஸ் பண்ணிக்கிறாங்களே ஒழிய, மக்கள் பிரச்சனையை பேசினாரா ? அப்படிங்கறது.. மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. துரைமுருகன் அவர்கள் போய் சென்ட்ரல் மினிஸ்டர் பார்த்து, உடனே ஒரு மனு கொடுத்துட்டு வர்றாரு. அவரு இன்னைக்கு – நேற்று மினிஸ்டர் இல்லை. எவ்வளவு வருஷம்மா மினிஸ்டர். ஆனால் இன்னைக்கு வரைக்கும் அதுக்கு தீர்வு வந்திருக்கா ? ஒவ்வொரு முறையும்… ஒவ்வொரு வருஷமும்… கர்நாடகாவில் தண்ணி கேட்டு கொண்டு தான் இருக்கின்றோம். இதற்கு நிரந்தர தீர்வு என்ன ? ஒண்ணுமே இல்ல.
எல்லா பக்கமும் இன்னைக்கு கரண்டு கட்டு பிரச்சன, விலைவாசி உயர்வு, எல்லா பிரச்சனையும் இருக்கு இன்னைக்கு. இதுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டியவர் முதலமைச்சர், இந்த ஆட்சி. ஆனால் இது பற்றி கேட்டால் பதில் சொல்ல மாட்டாங்க. அடுத்தவர்களை பற்றி குறை சொல்வார்கள். எப்போ பார்த்தாலும் ஆளுநர் மீது குறை சொல்வார்கள்.. அடுத்தவர்கள் மீது குறை சொல்வதை விட, உங்க ஆட்சியில் என்ன நடக்கிறது ? என்பதை நீங்கள் சிந்தித்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களுக்கு இந்த அரசு நல்லது செய்யனும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.