
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஸ்டாண்ட்லி மருத்துவமனை எவ்ளோ புகழ் பெற்ற மருத்துவமனை…. அண்ணே ஜெயக்குமார் சொல்லி கிட்டத்தட்ட 500 கோடிரூபாய்க்கு திட்டத்தை எடப்படியார் கொடுத்தாரு. அதான் சொல்லுறேன்…. சரியான கட்டமைப்பு கொண்ட மக்கள் நல்வாழ்வு துறை, மகத்தான துறை… நல்ல மருத்துவர்கள் கொண்ட துறை… ஆசியவிலே புகழ் பெற்ற மருத்துவமனை… இந்த மருத்துவமனைதா அதுலலாம் எங்களுக்கு மாற்று கருத்து கிடையாது.
இன்றைக்கு திறம்படுத்த தலைமை ஏற்று நடத்துவதில் இடைவெளி இருக்கு என நாங்க குற்றம் சாட்டுறோம். அரசு மருத்துவமனை மேல…. மருத்துவர்கள் மேல நம்பிக்கை இல்லாதா காரணத்தால் தான் அவர்களின் அமைச்சரை தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பெற்று, இன்னும் டிச்சார்ஜ் பண்ணல. இதயநோயாளி நோயாளி ஒரு வாரத்துல டிஸ்சார்ஜ் ஆகணும், இது வரைக்கும் டிஸ்சார்ஜ் ஆகாம இருக்கு… அதுக்கே இன்னும் விளக்கம் சொல்லலையே என கூறினார்.
அதே போல முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், காவேரி மருத்துவமனையில் இருக்கிற செந்தில் பாலாஜியை விழிப்போடு இருந்து, கண்காணிப்போடு இருந்து, மா.சுப்பிரமணியம் ஹெல்த் மினிஸ்டர் நூறு தடவை போவாரு… அவரைத் தொடர்ந்து முதலமைச்சர், அமைச்சரு எல்லாரும் போவாங்க.. ஆனால் இது என்ன பண்றது ? இது ஒரு ஏழை குழந்தை.. ஏழை குழந்தை நம்பி வருவது எந்த இடம் ? அரசு மருத்துவமனை.
அப்போ அரசு மருத்துவமனைக்கு பொறுத்தவரை…. நம்முடைய முன்னாள் அமைச்சர் சொன்ன மாதிரி, விழிப்போடு இருக்கணும்.தலையே சரியில்லாத போது… வால் எப்படி சரியா வரும் ? வீட்டுக்கு ஓனர் வந்து முழுமையான அளவுக்கு இருந்தா தான் நிர்வாகம் கரெக்டா இருக்கும். கீழ இருக்கிறவுங்களும் கரெக்டா இருப்பாங்க. ஓனரே சரி இல்லை அப்படின்னா… கீழே இருக்குறவுங்க எப்படி கரெக்டா இருப்பாங்க? இதான் கேள்வி என தெரிவித்தார்.