ஹரியானாவில் சோனிபட்டியிலுள்ள ஓ.பி ஜிண்டால் பல்கலைக்கழகத்தில் ஆண்கள் விடுதியில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பல்கலைக்கழக ஆண் விடுதிக்குள் இளைஞர் ஒருவர் ஒரு சூட் கேசில் தனது பெண் தோழியை மறைத்து கொண்டு சென்றுள்ளார்.

இதனை கண்ட விடுதி காவலர்கள் அந்த சூட்கேஸை திறக்கும் போது அதனுள் பெண் ஒருவர் சுருண்ட நிலையில் இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் விடுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழகம் மற்றும் காவல் அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மேலும் இந்த செயலுக்கு எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை. சூட்கேசில் மறைந்திருந்த பெண் அப்பல்கலைக்கழக மாணவியா அல்லது வேறு மாணவியா என்பது தெரியவில்லை. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.