இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது வீட்டில் உள்ள பேனை தனது நெத்தியால் தடுத்து நிறுத்துகிறார். மிக சிறிய அளவிலான வீட்டில் பேன் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதை மிகவும் உயரமான பெண் ஒருவர் தனது நெத்தியை பயன்படுத்தி வேகமாக ஓடும் பேனை நிற்க வைக்க முயற்சி செய்கிறார்.

இதையடுத்து ஃபேன் ஓடுவதை நிறுத்துகிறது. அதன் பின் மீண்டும் அவர் தனது வாயை பயன்படுத்தி பேனை முற்றிலும் நிறுத்த முயற்சிக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் இதுபோன்ற முயற்சிகளை பின்பற்றுவதை தவிர்க்க வேண்டும். மின் சாதனங்களை கை, முகம் அல்லது வாயைப் பயன்படுத்தி இயக்க முற்படுவது மிகுந்த ஆபத்தானது. இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கக்கூடும். அதனால் பொதுமக்கள் எப்போதும் பாதுகாப்பான முறையில் மின் சாதனங்களை கையாள வேண்டும் என்ற விழிப்புணர்வை இந்த நிகழ்வு ஏற்படுத்துகிறது.