நகர்ப்புற பகுதிகளில் அனைவருமே ஆன்லைன் டாக்ஸி, பைக் சேவைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதேபோன்று இளம்பெண் ஒருவர் மிகக் குறுகிய தூரத்திற்கு ஓலா பைக்கை முன்பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தையும், சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அந்த வீடியோவில் பெண் ஒருவர் சாலையில் நிற்கிறார். அவரிடம் ஓலா பைக் ஓட்டுநர் எங்கு செல்ல வேண்டும் என கேட்கிறார். அதற்கு அந்தப் பெண் அருகில் உள்ள இடத்திற்கு தான் செல்ல வேண்டும் என இடத்தை கூறுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by ROHIT VLOGSTER (@rohitvlogster)

உடனே ஓட்டுனர் அந்த இடத்தை தனது மொபைல் போனில் பார்க்கிறார். பார்த்ததும் அதிர்ச்சியில் இந்த இடம் பக்கத்துல தானே இருக்கு, அப்புறம் எதுக்கு பைக் எனக் கேட்க அதற்கு அந்தப் பெண் அப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் ஓலா பைக்கை புக் செய்ததாக கூறியுள்ளார்.

அதைக் கேட்ட ஓட்டுநர் சிரித்துக் கொண்டே வாங்க போகலாம் என கூறுகிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் அதற்கு நகைச்சுவையான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.