இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது கையில் பெரிய மலைப்பாம்பு ஒன்றைப் பிடித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த பாம்பு பெண்ணின் முகத்தின் அருகே இருக்கிறது. இதையடுத்து மீண்டும் அந்தப் பெண் தனது முகத்தில் அருகே அந்தப் பாம்பை கொண்டு செல்கிறார்.

 

இதையடுத்து அந்த பாம்புக்கு முத்தம் கொடுக்க நினைக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த பாம்பு அவரது மூக்கில் கொத்தியது. இதையடுத்து வலியில் துடித்த அவர் அந்தப் பாம்பை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.