இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் ஒரு பாத்ரூம் ஒன்றில் சிறிய அளவிலான ஓட்டை ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த பாத்ரூமுக்குள் சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்பெண் உள்ளே நிற்க அந்த சுவற்றின் ஓட்டை வழியே புலி ஒன்று தலையை உள்ளே காட்டியது. அந்தப் பெண்ணை பார்த்ததும் அந்த புலி ஓட்டையின் வழியே உள்ளே வர முயற்சி செய்கிறது.

ஆனால் அதனால் முடியவில்லை. இதை பார்த்து பயந்து போன பெண் அந்த புலியை விரட்ட முயற்சி செய்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.