சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 11ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் 10 மேயர் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. நகராட்சி வார்டுகளில் நடந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களை பாஜக பெற்றது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பரசுவாரா கிராமத்தில் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.இதனை அடுத்து அவர்களுக்கு நேற்று பதவி ஏற்பு நடைபெற்றது. இதில் தேர்தலில் போட்டியிட்ட 6 பெண் உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.

ஆனால் பதவியேற்ப்பின் போது அவர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவி ஏற்று கொண்டனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பல்வேறு கண்டனங்களை பெற்று வருகிறது. இதுகுறித்து புகார்களும் எழுந்துள்ளன. இதனால் தலைமை தேர்தல் அதிகாரி தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவி ஏற்பது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.