
சந்தித் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தமிழகத்திலே இன்றைக்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மாநில அரசு பணியில் பணியாற்றுகின்ற சாதாரண கிராம அலுவலர்களில் இருந்து….. VAOவில் இருந்து…. தாசில்தாரிலிருந்து…. மேல்மட்ட அதிகாரி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. அதே போன்று மத்திய அரசாங்கத்திலே பணியாற்றுகின்ற…. அலுவல் வாயிலாக இங்கு பணி செய்ய வருகின்ற போது…. அவர்கள் தாக்கப்படுகின்ற சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கரூரில் பெண் அதிகாரி வருமானத்துறை அதிகாரி, பாலியல் துன்புறுத்தப்பட்டு…. கை முறிக்கப்பட்டு….. கைமுறிவு ஏற்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. அதை தொடர்ந்து தான் இப்பொழுது இந்த சண்டை…. மாநில அரசாங்கத்திற்கு எங்கள் மீது மிகப்பெரிய சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அமலாக்க துறையின் மூலமாக…. தமிழகத்தினுடைய முதலமைச்சரின் தலைமையிலே மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது என்பதை அமலாக்கத்துறை இன்றைக்கு பல்வேறு கட்டங்களில் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
மணல் கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது…. 4703 கோடி ரூபாய் மணல் கொள்ளை நடைபெற்றிருக்கிறது என்று உயர்நீதிமன்றத்திலே அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் பாராட்டி இருக்கிறது. அமலாக்கத்துறை சிறப்பாக செயல்பட்டு…..சிறப்பான ஒரு அப்பிடவிடட்டை தாக்கல் செய்துள்ளது நாங்கள் அமலாக்க துறையை பாராட்டுகிறோம்…
இன்னும் விரைவில் ஸ்டாலின் தலைமையில் இருக்கிற அமைச்சர்களுக்கு அமலாக்கதுறையால் சமன் அனுப்பப்படுகிறது என்றும்….. உயர் அதிகாரிகளுக்கு சமன் அனுப்பப்படுகின்றது என்ற நிலையிலே… இன்றைக்கு அமலாக்க துறையிலே……. மாநில அரசாங்கம் உள்ளே நுழைந்து, லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளே நுழைந்து சோதனை செய்திருப்பது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. மாநில அரசாங்கம் உத்தமரும் கிடையாது என தெரிவித்தார்.