
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் ஜெய் ஸ்ரீ தங்கப் பதக்கம் வென்றார். 39 வயதான ஜெய் ஸ்ரீ தனது குடும்பத்தினருடன் பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வசித்து வருகிறார்.
இவர் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். அங்கு அவர் 320 கிலோ எடையை தூக்கி தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயஸ்ரீயை பலரும் பாராட்டி வருகின்றனர்.