
செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், எனக்கு ஒரு பெரும் நம்பிக்கை, சந்தேகம் இல்லாத ஒரு நம்பிக்கை இருக்கு… ஏன்னா அவசியமில்லாத எதுவுமே நடக்காது… 14 ஆண்டுகள் கழிச்சு இதுவரைக்கும் இந்த உலகம் ஒரு தீர்வு திட்டம் தரல… இந்தியா அண்டை நாடு… இது பாரா முகமாக இருக்கு. ஆக காலம் தான் தன்னுடைய நாயகனை அல்லது நாயகியை உருவாக்கும். காலம் ஏற்காமல் இங்கு எதுவுமே அடுத்த கட்டம் என்கின்ற வரலாற்று மாற்றம் என்பது இல்லை…
என்னிடம் யார் தொடர்பு கொண்டு …. அதை பேசி… அவங்களோடு பேச வச்சாங்களோ, அல்லது நான் யாரோடு எல்லாம் அய்யா நெடுமாறன் அவர்கள் உட்பட நான் அவர்களோடு உறவோடு இருக்கணும்… இப்போ இதையெல்லாம் சேர்ந்துதான் என் மூலமாக இந்த செய்தி வெளியே வந்திருக்கு. அதனால் நீங்க அதற்கு மேல் ஆவணங்கள் கேட்டால் அது இல்லை.
இன்னொரு அஞ்சு வருஷம் கழிச்சு வருவாங்க பாருங்க அப்படின்னு நான் சொல்லல… ஒட்டுமொத்த தமிழினமும் துவாரகா உடைய அறம் சார்ந்த முன்னேடுப்பிற்கு துணையாக நிக்கணும் அப்படிங்கறதுதான்…. பிரபாகரன் இருக்கின்றார் என எப்படி வேணாலும் பேசலாம். இது பட்டிமன்றத்திற்கான தலைப்பு.
ஒரு சூழல் சரியில்லாமல், இந்த உலகமே ஒன்று சேர்ந்து அடிச்சோம் அப்படின்னு சொல்லி மார்தட்டிக்கிட்டு நின்ன ஒரு மாவீரன், இன்னைக்கு வெளியில் வந்தால்… அவ்வளவு சீக்கிரம் இந்த உலகம் அல்லது வல்லரசு நாடுகள் சிவப்பு கம்பளத்துடன் வரவேற்கும் அப்படின்னு நீங்களும் நம்ப மாட்டீங்க, நானும் நம்ப மாட்டேன்… அதற்கான சூழலை உருவாக்கிட்டு தான் வர முடியும். அப்படி வந்தாதான் அடுத்த கட்டத்திற்கு போக முடியும்.
இதுவே தங்கள் எல்லாருக்கும் ஒரு பெரும் தோல்வின்னு நினைச்சா….. அதனுடைய வெளிப்பாடு என்னவாக இருக்கும் ? என உங்களுக்கு நல்லா தெரியும். அதனால நான் முன்னாடி சொன்னதுதான் ”நிறைவாகும் வரை மறைவாக இரு” என்பதுதான் அவர்களுடைய தாரக மந்திரம். அதனால் எந்த சூழ்நிலையிலோ, தமிழ் ஈழத்திற்கான விடியலுக்காக அவராக இருந்தாலும் சரி…. அவர் நிலையை…. அந்த இழப்பை…. அந்த வலியை உள்வாங்கும் யாராக இருந்தாலும் அந்த நிலம் ஒரு தீர்வு அடையாமல் ஓய மாட்டார்கள்.
அதனால் இன்னைக்கு அது தேவையாக இருக்கு….. இப்படிப்பட்ட குழப்பமான சூழலில்….. அதற்காக அவுங்க வராங்க…. அவங்க எப்ப வரணுமோ நிச்சயமா அவங்க வருவாங்க அப்படிங்கிறது தான் அந்த உரையாடல் மூலமாக…. அதுமட்டுமல்ல இன்னும் எல்லாத்தையும் என்னால வெளிப்படுத்த முடியாது. அப்படியான ஒரு நிலையில் எனக்கு தெரிந்ததை நான் உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன் என பேசினார்.