
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், தேமுதிகவுடன் பயணிப்போமா ? என்றெல்லாம் இல்ல. ஐயா நாங்க இறங்கிட்டோம்…. நீங்க தள்ளி விட வில்லை நாங்க இறங்கி, நீச்சல் அடிச்சு, கப் அடிச்சிட்டு வந்துடுவோம்… யாரோடும் நாங்கள் பயணிப்போம், எங்களுக்கு அதெல்லாம் கிடையாது. அதிரடி அரசியல், தடாலடி பதவிகள்… எளியவருக்கான…
அனைவருக்குமான ஆட்சி, அதிகாரம். வேலைகளில் இந்திரலோகம் DTI, ஜனநாயக புலிகள். கழுதைப்புலி மாதிரி சொன்னா எப்படி ? இந்திய ஜனநாயக புலிகள் என்று சொன்னால், ஒரு ஆவேசம் வர வேண்டாமா ? பசியில இருக்கின்றோம் நாங்க….. பார்த்து பார்த்து பசியில் இருக்கோம்… ஏமாற்றிக்கிட்டு போய்கிட்டே இருக்காங்க… இனிமேல் விட மாட்டோம்….
எல்லாரும் நான் சினிமாவில் நடிக்கலன்னு அழுதுகிட்டு உட்கார்ந்திருக்காங்க…. போ மேன். அது என்னுடைய பொழப்பு. நாளைக்கு கூட ஷூட்டிங் இருக்குது … என் பொண்டாட்டி பிள்ளைகளை நீயா காப்பாத்துவ? போ மேன்… நீங்க கேட்குறது உண்மைதான்… இதுல தீவிரமாக இறங்கி இருக்கிறோம், அதுல மாற்று கருத்து இல்லை. இந்த தேர்தலுக்கு முன்னாடியும் சரி, இந்த தேர்தலுக்குப் பிறகும் என்னுடைய பயணம் சாகும் நொடி வரைக்கும் முழுக்க முழுக்க இந்திய திருநாட்டின் முன்னேற்றத்திற்காக இருக்கும். ஆட்சியில் எல்லா எளியவர்களையும் அமர வைப்பதாக இருக்கும். சினிமா மூலமாக எனக்கு ஏதாவது ஒரு அரை கோடி, ஒரு கோடி வரும். அதை கெடுக்கிறார். கட்சி நடத்த காசு வேணாமா ஐயா என பேசினார்.