
திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , மத்திய அரசிடம் இருக்கக்கூடிய அனைத்து பொதுதுறையையும் தூக்கி அதானி கைல கொடுத்தாச்சி. அதானி ஏர்போர்ட் வந்துருச்சு… அதானி ரயில்வே வந்துடுச்சி. அதானி சாலைகள் வந்திருச்சு. அதானி மின்சாரம், அதானி துறைமுகம். இப்படி அனைத்தும் அதானிக்கு தூக்கி கொடுத்துட்டாரு. நான் கூட பலமுறை நகைச்சுவையாக சொல்வதுண்டு.
திரு. மோடி அவர்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருப்பாரு. விமானத்தில் போறீங்க… விமானி இல்லாம கூட போவீங்க… ஆனால் அதானி இல்லாம போக மாட்டீங்கன்னு… இதைத்தான் நம்முடைய காங்கிரஸ் பேரியக்க தலைவர் சகோதரர் ராகுல் காந்தி ஆதாரத்தோடு நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டார். ஆனால் இப்போ வரைக்கும் அதற்கு பதில் கிடையாது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன் என்று மோடி சொன்னாரு.
ஆனால் 5 லட்சம் வேலை வாய்ப்பை கூட இதுவரை உருவாக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு திரு மோடி அவர்கள் சொன்ன தேர்தல் வாக்குறுதி இந்தியாவை நான் வல்லரசு நாடாக மாற்றி காட்டுவேன். 2014 ஆம் ஆண்டில் 2020ல் இந்தியா வல்லரசு ஆக மாறி இருக்கும்னு சொன்னாரு. இப்ப 2023 திருப்பி அதையும் சொல்றாரு. என்ன சொல்றாரு தெரியுமா ?
இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றி காட்டுகிறேன். எப்ப தெரியுமா ? 2047 இல் மாத்தி காட்டுகிறேன் என்று சொல்கிறார். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மோடி அவரை நாம் அனைவரும் பாராட்டி தான் ஆக வேண்டும். இந்தியாவை மாத்தி காட்டுகிறேன் என்று சொன்னாரு. இப்ப என்ன பண்ணாரு ? இந்தியா என்கிற பெயரை மாத்தறாரு. சொன்னது செஞ்சது இது மட்டும் தான். இதையெல்லாம் ஒரு கட்சி என பேசினார்.