ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் சி.எல்.மீனா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக். இந்நிலையில் தீபக் தவுசா மாவட்டத்தில் இருந்து டெல்லிக்கு யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் தீபக்கை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை. தீபக்கின் தந்தை மீனா மகனின் தொலைபேசி அழைப்பு வராததால் அவரைத் தேடி டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவரது விடுதிக்கும் சென்று தேடி உள்ளார் அங்கு அவரது நண்பர்கள் தீபக் இரண்டு நாட்களாக விடுதி அறைக்கு திரும்பவில்லை என கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மீனா மகனை காணவில்லை என டெல்லியில் உள்ள முகர்ஜி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் பயிற்சி நிலையத்திற்கு அருகில் உள்ள வனப் பகுதியில் தீபக் பிணமாக கிடப்பதாக தெரியவந்துள்ளது. உடனே காவல்துறையினர் வனப்பகுதிக்கு சென்று பார்த்த போது தீபக் ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மேலும் அவரது பை மரத்தின் மேல் தொங்கி கொண்டிருந்தது.

அவரது பையிலும் தற்கொலை செய்ததற்கான எந்தவித கடிதமும் கிடைக்கவில்லை. உடனே அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இது பற்றி தீபத்தின் தந்தை கூறியதாவது, தினமும் மாலை தீபக் ஃபோனில் தன்னுடன் பேசுவான் கடந்த இரு நாட்களாக எந்த அழைப்பும் வரவில்லை. அவன் கடைசியாக கடந்த10ஆம் தேதி மாலையில் பேசினான் எனக் கூறியுள்ளார். மேலும் தற்கொலை செய்யப்பட்ட இடத்தில் உள்ள சில தடயங்களை வைத்து தீபக் கொலை செய்யப்பட்டிருக்க கூடுமோ என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.