
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்றத்துல காவேரி நதிநீர் பிரச்சனை சம்மந்தமாக… ஒரு தனி தீர்மானத்தை திராவிட முன்னேற்ற கழக அரசு கொண்டு வந்தது. அதுல நாங்க கலந்து கொண்டு பேசுனோம். அதுல நியாயமான கருத்தை எடுத்து வச்சோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருக்கின்ற பொழுது, காவிரி நதிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு என்னென்ன முயற்சிகள் எடுக்கபட்டன என்ற விவரத்தையெல்லாம் தெரிவிச்சேன். அதுல ஒரு சிலவற்றையும் தெரிவிச்சேன்.
இன்றைக்கு காவிரி நதிநீர் பிரச்சனை உச்சநீதி மன்றத்துல நடந்து கொண்டிருக்கும் பொழுது, தீர்ப்பு 2018இல் வருது. அந்த தீர்ப்பு வந்த உடன் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்து குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. அதோடுமட்டுமல்ல, அதற்கு மேல் காலம் நீடிக்க மாட்டாது என்பதையும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் படி மத்திய அரசாங்கம் 6 வார காலத்திற்குள் அந்த அமைப்பை ஏற்படுத்தாத காரணத்தினால் மத்திய அரசு மீது அண்ணா திமுக அரசாங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.
அதுமட்டுமில்லாமல் நாடாளுமன்றத்துல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர் 37 பேர், 21 நாள்கள் தொடர்ந்து அவையை ஒத்தி வைக்கின்ற அளவிற்கு அழுத்தம் கொடுத்தோம். உடனடியாக மத்திய அரசு தலையிட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்து குழு அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து 21 நாள்கள் அவையில் ஒத்திவைக்கின்ற அளவில போராட்டம் நடத்தினோம்.
அவையின் வெளியேயும் போராட்டம் நடத்தினோம் என தெரிவித்த எடப்பாடி அந்த போராட்ட விடியோவை காட்டி, அந்த காட்சியை பாருங்க. அப்போ MP ஆ இருந்தாரு அருண்மொழி தேவன். இது வெளியில நடந்தது என வீ டியோவை காட்டினார். மீண்டும் பேச ஆரம்பித்த எடப்பாடி, இப்படி நாங்க பிரைமினிஸ்டர் பேரை சொல்லியே… உச்சரித்தே… நாங்க காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்த முழு அமைக்க வேண்டும் என்று குரல்கொடுத்தோம். அதை கொச்சைப்படுத்தி பேசுறாரு என தெரிவித்தார்.