
புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி, தேவேந்திரகுல வேளாளர் என்று தான் நாங்க இருக்க முடியும்… அடையாளத்துடன் தான் நாங்கள் இருக்க முடியும்…. ஆயிரம் ஆயிரம் வருஷமா எங்களுடைய உழைப்பு, எங்களுடைய போராட்டம்….
நாங்க போராடி இந்த அடையாளத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம். அதை எல்லாம் எதோ இவர்களுக்காக…. ஏதோ ஒரு களவாணி கூட்டம் எங்களை… எதிர்கிறது என்பதற்காக எல்லாம் இதை விட்டு விட முடியாது… நீ 6 முறை Attempted இல்லை… 600 முறை பண்ணாலும் நாங்கள் தலைமுறை, தலைமுறையாக வந்துகிட்டே தான் இருப்போம்….
அப்படி ஒத்த ஆளாக எல்லாம் நீங்க அழிச்சுட முடியாது…. 2000 வருஷமா அடக்கி வச்ச நீ என்னதான் பாத்தாலும், நாங்க உங்கள விட மாட்டோம்… இன்னைக்கு பரவாயில்ல… சில அமைப்புகள் எல்லாம் தலைவர் அவர்கள் சொல்லுகின்ற பாதையிலே நடப்பாங்க…
நம்ம கூட வந்து சேராமலும், ஒட்டாமலும் கூட… தலைவர் அவர்கள் பட்டியல் வெளியேற்றம் எடுத்தால்…. பட்டியல் வெளியேற்றம் என்று பின்னாடியே கோரிக்கை வச்சிட்டு வருவாங்க…. தென் மாவட்ட கொலைகள் எடுத்தா அதே மாதிரி வருவாங்க… ஒரு சில வளர்ந்து கெட்டவர்களை தவிர மற்றவர்களெல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள.
இன்னொரு பொதுக்கூட்டம்… பிரகாஷ் அவர்கள் பேசியது போல….. நம்முடைய புகழ்ச்சி. நாம் தமிழர் என்பது, பாஜக என்பது… அவர்களுடைய புகழ்ச்சி… நம்ம ஜாதியை புகழ்ந்து பேசலாம்…. யார் வேணாலும், புகழ்ந்து பேசலாம். புகழ்ந்துட்டா நமக்கு அப்படியே பெரிய சந்தோஷம் வந்துரும்… அவன ஜெயிக்க வச்சுட்டு தான் அடுத்த வேலையை பார்க்க போவோம்… அவன் புகழுவான் என தெரிவித்தார்.