
கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான கேள்வி பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எலக்சன் ஆண்டு என்று சொல்ல முடியாது. எலக்சன் மன்த். ஒரு மாசம் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்ப அலோன்ஸ் பண்ணிடுவாங்க…. எலெக்ஷன் மாதம் என்று சொல்லும்போது, நாங்கள் ஏற்கனவே எல்லா பணியும் ஆரம்பித்து விட்டோம். கிட்டத்தட்ட பாத்தீங்கன்னா…
கழகத்தின் பொதுச்செயலா எடப்பாடியார் பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் – இளம் பெண்கள் பாசறை, அதே போன்று பிரச்சார குழு, அதே போன்று தொகுதி தேர்தல் அறிக்கை குழு, இட ஒதுக்கீடு பங்கீட்டு குழு…. இது மாதிரி எல்லா குழுக்களும் அமைச்சு, வேலையை பார்த்துக்கிட்டு இருக்காங்க.
அதனால கண்டிப்பா இன்னும் ஒரு மாசதுல கண்டிப்பா உங்களுக்கு தெரியும். எங்க தலைமையில் யார் யாரெல்லாம் வந்து எங்க கூட்டணியில்…. எங்க தலைமையை எடுத்துட்டு வாராங்களோ, அவர்கள் கூட்டணியில் இருப்பாங்க என பொதுச் செயலாளர் முறையை அறிவிப்பாரு…
ஏன் திமுக தொகுதி பங்கீடு வரை முன்னாடியே செல்கிறது என்றால், இப்போ அந்த கூட்டணி பேச்சுவார்த்தை… கூட்டணியை இறுதி செய்யுது என்றால், யாரும் அவர்களை விட்டு போய்விடக்கூடாது. அதற்காகத்தான் என்ன பண்றாங்க ? சீக்கிரம் வாங்க… சீக்கிரம் வாங்க…. சீக்கிரம் வாங்க… உட்காருங்க நாம பேசி முடிச்சுக்கலாம். உங்களுக்கு எத்தனை சீட்டு ? எத்தனை இடம் ? என்று சொல்லி முடிக்கிறாங்க… யாரும் எங்க கிட்ட வந்துடுவாங்கன்னு பயம்.
இவர் என்ன பண்ணாலும் சரி, வர்றவங்க வரத்தான் போறாங்க …அது வேற விஷயம். அதனால முறைப்படி எங்க தலைமையை ஏற்றுக் கொள்கின்ற கூட்டணியில் எந்தெந்த கட்சி இருக்கும் என்பதை முறைப்படி பொதுச் செயலாளர் அறிவிப்பாரு. அதனால அவங்க முன்னாடி எல்லாம் பண்ணுவதால் ஒரு பிரயோஜனம் கிடையாது என விமர்சனம் செய்தார்.