
டெல் அவிவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சந்தித்தார்.
இஸ்ரேலுக்கு முழு ஆதரவு என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் தான் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் டெல் அவிவ் நகருக்கு சென்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசி இருக்கிறார். ஏற்கனவே இஸ்ரேலுக்கு அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் சென்றடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை மேலும் தெளிவாக உறுதிப்படுத்தும் வகையிலே ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் சென்று,
இஸ்ரேலிய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்போதைய போர் நிலவரம், பிணை கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட அமெரிக்கர்களின் நிலை என்ன ? மற்றும் இஸ்ரேலில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலிலே கொல்லப்பட்ட அமெரிக்கர்கள் விவரம் என்ன போன்றவற்றையெல்லாம் கேட்டு அறிந்திருக்கிறார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை டெல் அவிவில் உள்ள கிரியாவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்து பேசிய போது “நாங்கள் இங்கே இருக்கிறோம். நாங்கள் எங்கும் செல்லவில்லை,” என்று நெதன்யாகு அவர்களின் சந்திப்பில் பிளிங்கன் கூறி உள்ளார்.
Prime Minister Benjamin Netanyahu is currently meeting with US Secretary of State Antony Blinken.
At the start of the expanded meeting, Prime Minister Netanyahu thanked @SecBlinken for his statement: 'We are here; we are not going anywhere'.https://t.co/pHudXoVijS pic.twitter.com/q6esbNR9ax
— Prime Minister of Israel (@IsraeliPM) October 12, 2023