கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் மாசி மாதம் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இதேபோன்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு விருதாச்சலத்தில் நடைபெற்ற மாசி மகத்திருவிழாவில் ஆயிரக்கணக்கிற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அப்போது நதிக்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது போன்ற முறைகளை செய்துள்ளனர். இதனால் நதிக்கரை ஓரங்களில் அதிகமான துணிகள், பிளாஸ்டிக் பேப்பர், பைகள் என குப்பைகள் தேங்கி கிடந்துள்ளது.

இந்நிலையில் விருதாச்சலம் மணிமுக்தா நதிக்கரையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும் என அரசிற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை அடுத்து நாம் தமிழர் கட்சி கடலூர் மாவட்ட செயலாளர் கதிர்காமன் நதிக்கரையோரம் உள்ள மணலில் குழியை தோண்டி கழுத்து வரை மண்ணுக்குள் புதைத்துக் கொண்டு நூதன முறையில் கழிவுகளை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.