
செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அன்பு சகோதரர்களே வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுடைய பணிகளுக்காக, கட்சியினுடைய ஒவ்வொரு அணிகளும், ஒவ்வொரு பிரிவுகளும் கட்சியும் தயாராகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கும் அணிகள் உடைய மாநாடுகள் நடத்துவதற்காக ஏற்பாடு செய்து, கோவை தொகுதியிலே இன்று மகளிர் அணியின் பிரதிநிதிகள் கொண்ட மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.
ஒவ்வொரு பகுதியில் இருந்தும் மகளிர் அணியின் நிர்வாகிகள், மாநில அளவில் இருக்கக்கூடிய அத்தனை நிர்வாகிகளும் அந்த பகுதிக்கு உட்பட்டவர்களை அழைத்து, ஒன்று அவர்களுடைய பணியினை பற்றி ஆய்வு செய்கிறார்கள். இங்க இருக்கக்கூடிய மகளிர் அணி சகோதரிகள் கடந்த 10 நாட்களாக ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மகளிர் அணி நிர்வாகிகள் எப்படி பணி செய்கிறார்கள் ? அவர்களை இந்த பிரதிநிதிகள் மாநாட்டுக்கு அழைப்பது, கட்சியினுடைய பணிகளில் அவர் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பதை பார்த்து,
கட்சிக்கு பொறுப்பாளர்களுக்கு சொல்வது என்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையிலே இந்த கோவை தொகுதிக்குட்பட்ட மகளிர் அணி பிரதிநிதிகள் மாநாடு, இன்று வெற்றிகரமாக நடைபெற்று இருக்கிறது. இதற்காக ஹரியானா ஸ்ரீஜா தொகுதியில் இருந்து கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் திருமதி சுனிதா துக்கள் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி, அவர்கள் இங்கே பங்கு பெற்றிருக்கிறார். நாளை அவரும், நானும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் மகளிர் அணி மாநாட்டிலே கலந்து கொள்ள இருக்கின்றோம் என பேசினார்.