வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் தேங்கும் மழை நீரை அகற்றுவதற்கு பணியாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர்.

மழையால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டை மழை நீர் சூழ்ந்தது. இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.