
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் சமீபத்தில் மகா கும்பமேளா நடைபெற்றது. இதில் பாசிமணி மாலை விற்ற மோனாலிசா என்ற பெண் தனது காந்த விழி கண்களால் சமூக வலைதளத்தில் பிரபலமானார். இதனால் அவருடன் செல்பி எடுப்பதற்காக தினமும் ஏராளமான மக்கள் திரண்டனர். இதனால் அவர் வேறு வழியின்றி தனது சொந்த வீட்டிற்கு திரும்பினார். இதையடுத்து மோனாலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது.
இந்தி திரை உலகில் பிரபல இயக்குனரான சனோஜ் மிஸ்ரா இயக்க இருக்கும் “தி டைரி ஆஃப் மணிப்பூர்” என்ற படத்தில் நடிப்பதற்காக மோனலிசாவுக்கு வாய்ப்பு வழங்கினார். அதோடு மோனாலிசாவையும் மும்பைக்கு வரவழைத்து, அவரது தோற்றத்தை மாற்றி சினிமாவில் நடிக்க பயிற்சிகளும் வழங்கப்பட்டது. காந்த கண்ணழகி என்று வர்ணிக்கப்பட்ட அவர், சினிமா மட்டுமின்றி நகைக்கடை திறப்பு விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்நிலையில் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அதனால் அந்த பெண் 3 முறை கரு கலைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சனோஜ் மிஸ்ரா, மோனாலிசாவுடன் சுற்றிக் கொண்டிருந்ததை பார்த்த அந்த பெண் இயக்குனர் மீது புகார் கொடுத்தார். அதன்படி சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து மோனலிசா ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் காவல்துறையினர் மோனாலிசாவிடம், சனோஜ் மிஸ்ரா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாரா? என விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது