தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால் வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட அவரவர் சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. போக்குவரத்து பாதிப்பை கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் அனைவருக்கும் அறிக்கை ஒன்றை கூறியுள்ளார்.

இந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, கார் மற்றும் வேறு வாகனங்கள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் மக்கள் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பகுதிகள் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். திருப்போரூர் செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளி சுற்றுச்சாலை வழியாக செல்வது சிறந்ததாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.