
தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி பகுதியில் பாண்டி-பேச்சியம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பேச்சியம்மாள் என்பவரை அவருடைய உறவினர் நல்லகண்ணு கடந்த 2019 ம் ஆண்டு நடந்த சிறு பிரச்சனையின் போது கொலை செய்துள்ளார். இதனால் நல்ல கண்ணு என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் குற்றவாளியான நல்ல கண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ் பி ஆல்பர்ட் ஜான் இந்த வழக்கில் சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர் எல்லம்மாள், பசுவந்தனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு , முழு விசாரணைக்கும் உதவியாக இருந்த கவிதா ஆகியோருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்.