
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மாநிலத்தில் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னதாக ஒடிசா சென்று அம்மாநிலத்தின் விளையாட்டு கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்த உதயநிதி, அதேபோல தமிழகத்திலும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பிரம்மாண்ட ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க வேண்டும் என திட்டமிட்டார். அதற்குரிய பணிகளை துவங்கிய அமைச்சர் உதயநிதி முதற்கட்டமாக அனைத்து விளையாட்டுகளுக்கும் பயிற்சியாளர்களை நியமிக்கும் வகையில் சமீபத்தில் புது பயிற்சியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அதன்பின் பிரம்மாண்ட ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பதற்காக சென்னை அருகில் இருக்கும் செம்மஞ்சேரியில் 105 ஏக்கர் மதிப்பிலான இடத்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது விளையாட்டு திடல் அமைக்கவுள்ள காலி இடங்களின் வழித்தடம் மற்றும் இடத்தின் மாதிரி வரைப்படம் வாயிலாக அதிகாரிகள் எடுத்துரைத்தனர். ஸ்போர்ட்ஸ் சிட்டியானது உலக தரத்தில் இந்தியாவில் சிறப்பானதாக இருக்குமென அவர் தெரிவித்தார்.