
இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். தோனியின் தலைமையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2 முறை கோப்பை வென்றதற்கு இவரது பங்களிப்பு முக்கியமானதாகும். இதனை அடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அமெரிக்கா பயணம் மேற்கொண்டார். பின்னர் புற்று நோயிலிருந்து மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றார். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் உத்தப்பா யுவராஜ் சிங்கின் ஓய்விற்கு விராட் கோலி தான் காரணம் என கூறிய அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.
இது குறித்த அவர் கூறியதாவது, யுவராஜ் போன்ற தகுதியான வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும். புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றார். உடற்தகுதி தேர்வில் புள்ளிகளை குறைக்க கூறியிருந்தார் ஆனால் இந்திய அணி எந்த ஒரு கருணையும் காட்டவில்லை. அப்போது இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி தான் செயலாற்றினார். இருந்த போதும் உடற்தகுதி போட்டியில் திறமையாக செயல்பட்டு இந்திய அணியிலும் இடம் பெற்றார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும் சதம் அடித்தார்.
ஆனால் 2017 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி விளையாட்டில் சரிவர விளையாட முடியவில்லை. இதன்பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டது. நிர்வாகம் தன்னை கவனிக்கவில்லை என்பதை தோணி தனக்கு தெளிவுபடுத்தியதாக யுவராஜ் ஏற்கனவே கூறியிருந்தார். மிகப்பெரிய வீரருக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்றைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் யுவராஜ் ஓய்வு பெறுவதற்கு மறைமுகமாக காரணமாகும். தகுதியான வீரருக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு உத்தப்பா கூறினார்.