திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரத்தியில் இளைஞர் ஒருவர் எருமை மாட்டை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞர் முதலில் எருமைக்கு மாலை அணிவித்து பின்னர் தன்னுடைய கழுத்தில் மாலை அணிந்து கொண்டார்.

எருமை நெற்றியில் குங்குமம் இட்டு மாலை அணிவித்து தாலி கட்டியுள்ளார். அப்போது எருமைக்கும் அந்த இளைஞருக்கும் உறவினர் ஒருவர் ஆரத்தி எடுத்து வாழ்த்தியுள்ளார். அதன் பிறகு அந்த இளைஞர் எருமை மாட்டின் மீது ஏறி சிறிது தூரம் சென்றுள்ளார் .ஆனால் அது மிரண்டு ஓடிள்ளது. அப்போது அந்த இளைஞர் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.