தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. இவர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ‘சிந்துபாத்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நிலையில், தற்போது கதாநாயகனாக “பீனிக்ஸ்” என்ற திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படத்தினை அறிமுக இயக்குனரான அனல் அரசு இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ள நிலையில் பிரேவ் மேன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் சம்பத், வரலட்சுமி சரத்குமார், நடிகை தேவதர்ஷினி ஆகிய நடிகர்கள் நடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான படத்தின் டீசரால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.

ஆக்சன் திரைப்படமான இந்த திரைப்படத்தின் டீசரின் முதல் காட்சியில் சிறுவர் சீர்திருத்த பள்ளி காணப்பட்டது. அதில் குற்றவாளியாக சூர்யா முகத்தை மூடிய நிலையில் வரும் காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தின் “யாராண்ட” பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ள படக்குழு இந்த திரைப்படம் வரும் ஜூலை 4ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது.