
நடிகர் விஜய் TVK என்ற புதிய கட்சியை தொடங்கியதும் முதலாவதாக வாழ்த்து கூறிய சீமான் தம்பியுடன் இணைந்து பணியாற்றுவதில் எந்த தயக்கமும் இல்லை என்று தெரிவித்தார். வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார். தேர்தலில் நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் இணைந்து போட்டியிடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
2 கட்சிகளும் சேர்ந்து போட்டியிடும் பட்சத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும் என்றும் பலரும் எதிர்பாத்தனர். ஆனால் திடீரென சீமான் கூட்டணி இல்லை எனக் கூறிவிட்டார்.
இதற்கு விஜய் தரப்பிடம் சீமான் இறங்கிப் போய் பேச்சு நடத்தியதாகவும் அப்போது மிகக் குறைந்த தொகுதி தருவதாகவும் ஆனால் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யுமாறு கண்டிஷன் விடுத்ததாகவும் தகவல் வெளியானது. இதனால் தான் கூட்டணி முயற்சியை சீமான் கைவிட்டதாக கூறினார்.