
கடந்த வருடம் தஞ்சை மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி லாவண்யா மதமாற்றம் குறித்து பேசியதாக ஒரு வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய விஎச்பி பிரமுகர் முத்துவேல் அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே முத்துவேல் மீது 15 வழக்குகள் பதிவாகி இருக்கிறது.
அதோடு பள்ளி தாராளரிடம் முத்துவேல் ரூபாய் 25 லட்சம் கேட்டு மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் முத்துவேல் மீது காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரு மதத்தினரிடையே மோதலை தூண்டும் அடிப்படையில் செயல்பட்டது, பாதிரியாரை மிரட்டி ரூ.25 லட்சம் பறிக்க முயன்றது உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.