
திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், தமிழ் சமூகத்தின் வரலாற்றை, அடுத்த தலைமுறைக்கு கடத்துகிற எங்களை போன்றவர்களுக்கும் இருக்கிறது என்ற உணர்வோடு தான் இந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டிருக்கின்றேன். தன் வாழ்ந்த காலத்தில் திருகுரான் எந்தெந்த கருத்துக்களை, நன்னெறிகளை போதித்ததோ, அத்தனைக்கும் ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து போர்க்களத்தில் மடிந்த மாவீரர்.
இப்படி பல பக்கங்கள் என்னிடத்திலே குறிப்புகளாக இருக்கிறது. ஆக இவ்வளவு மாபெரும் தலைவன் தமிழ் சமூகத்திற்கும், திப்புவிக்கும் என்ன உறவு என்ற செய்திக்கு நான் வந்து விடை தர விரும்புகின்றேன். சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு… மருது இருவருக்கு நாம் விழா எடுத்தோம், வேலுநாச்சியாருக்கு விழா எடுத்தோம், குயிலி நாச்சியாரை வரலாற்று பக்கங்களில் பதிவு செய்தோம். அந்த வேலுநாச்சியார் ஆங்கில படையை எதிர்த்து சிவகங்கை சீமையிலே போரிட்ட போது…
ஆங்கில படைகள் சுற்றி நின்று வடுக நாதரையும், வேலு நாச்சியாரையும் சிறைப்படுத்திய போது அவர்கள் அந்த மண்ணில் உயிரோடு வாழ முடியாது. எந்த நேரத்திலும் வேலுநாச்சியாரும், மருது சகோதரர்களும் கைது செய்யப்பட்டு…. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தண்டனைக்கு உள்ளவர்கள் என்று தெரிந்த போது…. ஒரே ஒரு மன்னன் மருது இருவரை தளபதிகளாக அழைத்து, வேலுநாச்சியாருக்கு திண்டுக்கல்லில் அடைக்கலம் தந்து,
தன் ஆயிரக்கணக்கான படைவீரர்களை அனுப்பி…. மீண்டும் ஆங்கிலே ஏகாதிபத்தியத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்வதற்கு காரணமாக இருந்து…. வரலாற்றில் வேலுநாச்சியாரும், மருது இருவரும் மாவீரர்கள் என்று போற்றப்படுவதற்கு தன் படையை அனுப்பிய மகத்தான தலைவன் திப்பு சுல்தான். அண்ணாமலை கும்பல்களே… ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனதா கும்பல்களே…. வேலுநாச்சியாரை சொந்தம் கொண்டு கொண்டாடுகிறீர்களே…. முத்துராமலிங்கத் தேவரை சொந்தம் கொண்டு கொண்டாடுகிறீர்களே..
மருது இருவரை சொந்தம் கொண்டு கொண்டாடுகிறீர்களே… அந்த வேலு நாச்சியார் வரலாற்று பக்கங்களில்… அந்த வீரமங்கைக்கு அடைக்கலம் தந்துட்டு, தன் படைகளை அனுப்பி….. தன் வீரர்களை அனுப்பி… அந்த போரில் அவர்களை காப்பாற்றிக் கொண்டு வந்து தன் கட்டுப்பாட்டில் வைத்து மருது இருவர் தலைமையில் பல்லாயிரக்கணக்கான வீரர்களுக்கு பயிற்ச்சி அளித்து மீண்டும் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட செய்து…. இன்றைக்கு வரலாற்று பக்கங்களில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிய மாமன்னன் திப்பு சுல்தானை மட்டும் மறைக்க வேண்டிய அவசியம் ஏன் ? என கேள்வி எழுப்பினார்.