பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி நடைபெறும். இதன்மூலம் அவர் பொதுமக்களுடன் உரையாடுவார். இந்நிலையில் 118 ஆவது நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், நீங்கள் ஒரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா? மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை தான் இந்த நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் இந்த முறை 4-வது வாரத்திற்கு பதிலாக 3-வது வாரமே நாம் சந்தித்துள்ளவோம். ஏனெனில் அடுத்த வாரம் சுதந்திர தினம். நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள். இந்திய குடியரசின் 75 ஆவது ஆண்டு தினமாகும்.

நமக்கு புனித அரசியலமைப்பை வழங்கிய அனைத்து தலைவர்களுக்கும் தலைவணங்கி என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விண்வெளியில் செடிகளை வைப்பதற்கான முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகின்றது. இஸ்ரோ வரும் காலத்திற்கான தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகின்றது என்று அவர் பாராட்டினார். கடந்த டிசம்பர் 30ம் தேதி விண்வெளிக்கு காராமணி விதைகள் அனுப்பப்பட்டது. பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளியில் அது முளைத்தது. எதிர்காலத்தில் விண்வெளியில் காய்கறிகளை வளர செய்வதற்கான ஓர் உந்துதல் ஏற்படுத்தும் பரிசோதனையாக இது அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.