
மத்திய சுகாதார அமைச்சகமானது புதன்கிழமை வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,542 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையானது 63,562 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியாவில் மொத்த இறப்பு எண்ணிக்கையானது 5,31,190 ஆக அதிகரித்துள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. காலை 8 மணி புள்ளிவிவரங்களின் அடிப்படையில் டெல்லியில் 4 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையானது 4,42,42,474 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் இறப்பு விகிதம் 1.18 சதவீதமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தின் படி நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரையிலும் 220.66 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.