
கடந்த 2018 ஆம் வருடம் வெளியாகிய பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதையடுத்து தனுஷ் நடிப்பில் வெளியாகிய கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். மேலும் இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” திரைப்படத்தின் சூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்துக்கான டப்பிங் பணிகளை நகைச்சுவை நடிகர் வடிவேலு துவங்கியுள்ளதாக படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Our favourite #Vadivelu sir starts dubbing for #MAAMANNAN 👏❤️@Udhaystalin @mari_selvaraj @arrahman @KeerthyOfficial #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off @MShenbagamoort3 @teamaimpr pic.twitter.com/8KWjXJ1718
— Red Giant Movies (@RedGiantMovies_) March 2, 2023