வாரிசு துணிவு திரைப்படங்களின் வசூல் விவரம்.

விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் சென்ற 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இந்த இரு திரைப்படங்களும் விரைவில் 100 கோடி வசூலை எட்ட உள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இரு திரைப்படங்களும் எவ்வளவு விலைக்கு விற்கப்பட்டிருக்கின்றதோ அதை பொறுத்து தான் படத்தின் லாபம் என்ன என்பது தெரியவரும்.

அந்த வகையில் இந்த இரண்டு திரைப்படங்களின் வியாபாரத்திற்கு நிறையவே வேறுபாடு இருப்பதாக ஹாலிவுட் வட்டாரம் கூறுகின்றது. மேலும் துணிவு திரைப்படத்தை விட வாரிசு திரைப்படம் அதிக விலைக்கு விற்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. இது குறித்த விவரம் குறித்து பார்க்கலாம் வாங்க.

வாரிசு திரைப்படத்தின் பட்ஜெட் விஜயின் ஊதியத்துடன் சேர்த்து 200 கோடியாம். இதன் தமிழக வெளியீட்டு உரிமை 70 கோடிக்கும் தெலுங்கு உரிமை 15 கோடிக்கும், கர்நாடகா உரிமை 7 கோடிக்கும், கேரள உரிமை 6 கோடிக்கும், வெளிநாடுகளில் உரிமை 30 கோடிக்கும், இந்திய உரிமை 30 கோடிக்கும், ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ உரிமை 120 கோடியும் வந்திருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் திரையரங்க வசூல் படி 175 கோடி அதிகமாக வசூல் செய்தால் படம் வெற்றிகரமாக அமையலாம்.

அஜித்தின் துணிவு திரைப்படத்தின் பட்ஜெட் அவரின் சம்பளத்துடன் சேர்த்து 160 கோடியாம். தமிழக தியேட்டர் உரிமை 60 கோடிக்கும் தெலுங்கு உரிமை 1.5 கோடிக்கும், கர்நாடகா உரிமை 3.5 கோடிக்கும், கேரளா உரிமை 2.5 கோடிக்கும், இந்தி உரிமை 20 கோடிக்கும், வெளிநாடுகள் உரிமை 15 கோடிக்கும் ஓடிடி, சேட்டிலைட், ஆடியோ உரிமை மூலம் 90 கோடி வந்திருப்பதாக செய்திகள் கூறப்படுகின்றது. ஆகையால் தியேட்டர் வசூல் 120 கோடி வசூல் செய்தால் படம் லாபகரமாக அமையுமாம். ஆகையால் இதன் மொத்த வசூல் குறித்த விவரம் இரண்டு திரைப்படங்கள் ஓடி முடிந்த பிறகு தெரியவரும் குறிப்பிடத்தக்கது.