
சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில் பொந்து ஒன்றிலிருந்து எலி வெளியில் வருகிறது. அப்போது ஒரு சேவல் அங்கு நின்றுகொண்டிருக்கிறது. இதை பார்த்த எலி, அதன் அருகே செல்கிறது. எலி வருவதை பார்த்தும் சேவல் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அமைதியாக நின்றது. அதன்பின் எலி, சேவலின் அருகில் சென்று வம்பு இழுக்கிறது. இதனால் கோபமடைந்த சேவல் எலியை பதிலுக்கு கொத்த தொடங்குகிறது. உடனடியக எலி ஒரே கடியில் கீழே விழுந்து வலியால் துடிதுடிப்பது போன்று நடித்து மயக்கமடைவது போல் நடிக்கிறது. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Kung Fu – Rooster Style#fun pic.twitter.com/Sk7Fsvykli
— WildLense® Eco Foundation 🇮🇳 (@WildLense_India) November 5, 2022