பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார்ச்-25) கர்நாடகாவுக்கு வருகை புரிந்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி தாவணகெரேவுக்கு வந்து பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கர்நாடகாவில் இரட்டை இன்ஜின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர மக்கள் முடிவு செய்து இருக்கின்றனர்.

நீண்ட கால சந்தர்ப்பவாத மற்றும் சுயநல அரசாங்கங்களால் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாஜகவின் நிலையான அரசு தேவை என்று பிரதமர் மோடி பேசினார். இதற்கு முன்னதாக பெங்களூரு வந்த பிரதமர் கேஆர் புரம்-ஒயிட்பீல்டு இடையில் சுமார் 13 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.