
இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடப்பதாக பரவி வரும் வதந்தி குறித்து முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், உயர் அதிகாரிகள் உள்ளிட்டர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய பீகாரில் இருந்து 4 பேர் கொண்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று தமிழகம் வரும் நிலையில், முதல்வர் இந்த ஆலோசனையை மேற்கொண்டு உள்ளார்.