தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்துள்ள தசரா திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கையில் வி என்ற லெட்டரை வைத்திருக்கும் படியான ஒரு புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிஷன்கள் வி என்றால் விஜயா என்ற கேட்டு வருகிறார்கள். ஏற்கனவே விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாக சர்ச்சைகள் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது வி என்ற லெட்டரை கீர்த்தி சுரேஷ் கையில் வைத்திருக்கும் படியான புகைப்படம் வெளியானதால் மீண்டும் அந்த சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் அவர்களைப் பற்றி இப்படி தவறாக பேசாதீர்கள் என்று கூறி வருகிறார்கள்.