இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் யு பி ஐ பரிவர்த்தனைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி யுபிஐ மூலமாக வரி செலுத்தும் வரம்பு அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். வரி செலுத்தும் வரம்பு ஏற்கனவே இருந்த ஒரு லட்சம் ஆனது தற்போது 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தனிநபர் வருமான வரி, சொத்து வரி மற்றும் முன்பண வரி செலுத்துவோர் ஒரே பரிவர்த்தனையில் 5 லட்சம் ரூபாய் வரை செலுத்த வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ளார்.