
LPG சிலிண்டரை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஒருசில விஷயங்களை தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அதன்படி 1 கேஸ் சிலிண்டரில் 14.2 கிலோ எரிவாயுவானது இருக்கிறது. சிலிண்டர் அடுப்பை 1 மணிநேரம் எரிய வைப்பதன் மூலம் எவ்வளவு எரிவாயு யூஸ் ஆகும்? என்பது குறித்து நாம் காண்போம். எனினும் இந்த விஷயம் எரிவாயு அடுப்பின் பர்னரை பொறுத்தது தான்.
அடுப்பில் 2 பர்னர் இருக்கிறது. இதில் பெரிய பர்னரில் ஒரு மணிநேரம் அடுப்பை எரிய வைப்பதால் 180 கிராம் எரிவாயுவானது செலவாகும். அதேபோல் சிறிய பர்னரில் 138 கிராம் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. அதன்படி ஒரு பெரிய பர்னர் 30% அதிக எரிவாயுவை உட்கொள்கிறது. சிலிண்டரை ரூபாய்.1,200 கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது..
அந்த வகையில் 1 கிலோ எரிவாயுக்கு ரூ.85 செலவிடப்படும். அதன்படி பார்த்தால் சிறிய பர்னரில் ஒரு 1 நேரத்திற்கு உங்கள் எரிவாயு விலையானது சுமார் ரூ.12 ஆகும். அதே பெரிய பர்னர் எனில் ரூ. 15.3 செலவிடப்படும். 2 பர்னர்களையும் ஒரே நேரத்தில் பற்ற வைத்தால்1 மணி நேரத்திற்கு சுமார் ரூ. 28 வரை செலவாகும். அதோடு தினசரி 3 வேளை சமைப்பதற்காக அடுப்பை 2 மணிநேரம் எரிய வைக்கவேண்டும் எனில் அதன் விலையானது சுமார் ரூ. 50 செலவாகும் என கூறலாம்.